வாழ்த்துக்கள்!!! தேசிய குத்துச் சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற புதுகை மாணவர்



புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டியில் உள்ள ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர் தினேஷ் ஹனுமந்த் மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் நடந்த முதலாவது தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ஜீனியர் பிரிவில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொண்டு 44-46 கிலோ எடைப்பிரிவில் 3ம் இடம் பிடித்து, வெங்கல பதக்கம் வென்றார். 


இவர் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். வெற்றிபெற்ற மாணவரை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

Post a Comment