மீமிசல் காவல் நிலையம் சார்பில், நேற்று 06/02/2019 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மீமிசல் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி, கடை வீதி வழியாக மீமிசல் காவல் நிலையத்தை வந்தடைந்தது.
பேரணி புறப்படுவதற்கு முன் மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது, செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்ட கூடாது என்றும் ஹெல்மெட் அணிந்து தான் வாகனம் ஓட்ட வேண்டும் என்பன பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதில், மீமிசல் காவல் ஆய்வாளர் உள்பட ஏராளமானோர் மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணிந்து பேரணியில் கலந்துகொண்டனர்.
தலைக்கவசம்! உயிர்க்கவாசம்!