மீமிசல் சுந்தர வடிவேல் மருத்துவணை அருகே எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம்.மையம் இயங்கி வருகிறது. நேற்று (06/02/2019) புதன்கிழமை இந்த ஏ.டி.எம்.இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட வாடிக்கையாளர் ஒருவர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.