நெடுவாசலில் மீண்டும் ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் தொடங்கிய நாளில் நெடுவாசலில் கருப்பு கொடி ஏந்தி சனிக்கிழமை நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்.15 ஆம் தேதி மத்திய அரசு நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, திட்டத்தை எதிர்த்து, பிப்.16 ஆம் தேதி நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் பல்வேறு கிராம மக்கள் திரண்டு போராட்டத்தைத் தொடங்கினர். தொடர்ந்து., திட்டத்தை எதிர்த்து பல மாதங்கள் போராட்டம் நடைபெற்றது. பின்னர், திட்டம் செயல்படுத்தப்படாது என்ற உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். இந்நிலையில், திட்டத்தை எதிர்த்து போராட்டத்தை தொடங்கிய பிப்.16 ஆம் தேதி சனிக்கிழமை போராட்டம் நடைபெற்ற நாடியம்மன் கோயில் திடலில் நெடுவாசல் போராட்டக்குழுவினர், கருப்பு கொடியேந்தி திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முன்னதாக காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Post a Comment