பொள்ளாச்சி விவகாரம், குவைத் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்



பொள்ளாச்சி சம்பவத்திற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனம் வலுத்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மாணவ – மாணவியர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

மேலும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் குவைத்தில் பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கிட வேண்டும் என்ற வாசகங்களோடு இன்று (15.03.2019)வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் குவைத் நாட்டில் உள்ள முர்காப் நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குவைத் வாழ் தமிழர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கடும் கண்டணத்தை பதிவு செய்தனர்

Post a Comment

0 Comments