மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு



வருகிற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று வெள்ளிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தியது. இதில் கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன.

நேற்று 12.45 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை அறிவித்தார்.

திமுக :

1. சென்னை வடக்கு
2. சென்னை தெற்கு
3. மத்திய சென்னை
4. ஸ்ரீபெரும்புதூர்
5. காஞ்சிபுரம் (தனி)
6. அரக்கோணம்
7. வேலூர்
8. தர்மபுரி
9. திருவண்ணாமலை
10. கள்ளக்குறிச்சி
11. சேலம்
12. நீலகிரி (தனி)
13. பொள்ளாச்சி
14. திண்டுக்கல்
15. கடலூர்
16. மயிலாடுதுறை
17. தஞ்சாவூர்
18. தூத்துக்குடி
19. தென்காசி (தனி)
20. திருநெல்வேலி

காங்கிரஸ் :

1. புதுச்சேரி
2. சிவகங்கை
3. கன்னியாகுமாரி
4. விருதுநகர்
5. தேனி
6. திருச்சிராப்பள்ளி
7. கரூர்
8. கிருஷ்ணகிரி
9. ஆரணி
10. திருவள்ளூர் (தனி)


விடுதலை சிறுத்தைகள் :

விழுப்புரம், சிதம்பரம்

இந்திய கம்யூனிஸ்ட் :

திருப்பூர், நாகை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் :

கோவை, மதுரை

மதிமுக :

ஈரோடு

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் :

இராமநாதபுரம்

கொ.ம.தே.க :

நாமக்கல்

ஐ.ஜே.கே :

பெரம்பலூர்

ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments