இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால்துறையில் வேலை!



இந்திய தபால்துறையில், கிராமின் டக் சேவாக் என்ற பணிக்கு தமிழகத்தில் மட்டும் 4,442 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. 

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இந்த அருமையான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற கோபாலப்பட்டினம் இணையதளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

மொத்த காலியிடங்கள்: 4442

பணிகள்:
கிளை தபால் அலுவலர் (BPM) 
உதவி கிளை தபால் அலுவலர் (ABPM) 
Dak Sevak

காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் மட்டும் மொத்தம் = 4,442 காலிப்பணியிடங்கள் உள்ளன.

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 15.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2019

வயது:
குறைந்தபட்சமாக (15.03.2019 க்குள்) 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்:
1. BPM என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.12,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,480 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
2. ABPM / Dak Sevak என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.29,380 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் / ஆண்கள் - ரூ.100
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் - தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை 

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம். 

ஆஃப்லைனில் தேர்வுக்கட்டணத்தை செலுத்துவோர் தலைமை தபால் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள ஏதேனும் ஒரு தபால் நிலையத்திலோ சென்று செலுத்தலாம்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
1. உள்ளூர் மொழியில் பேச, எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
2. குறைந்தபட்சம் 60 நாட்கள் அடிப்படை கம்யூட்டர் பயிற்சி பெற்றவராக இருத்தல் அவசியம்.
3. சைக்கிள் ஓட்டத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். 

விண்ணப்பிக்க தேவையானவை:
ஸ்கேன் செய்யப்பட்ட 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், புகைப்படம், கையெழுத்து, கணினி சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அந்த சான்றிதழ் போன்றவை அவசியம்.

மேலும், இது குறித்த முழு விவரங்களை பெற
www.tamilnadupost.nic.in - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Post a Comment

0 Comments