புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துக் கடைகளிலும் எலி விஷ மருந்துகள், கரப்பான்பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் கொசுவிரட்டி போன்ற வீட்டு உபயோகப் பூச்சி மருந்துகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சிமருந்து விற்பனை உரிமம் அவசியம்,
உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் எலி விஷ மருந்துகள், கரப்பான்பூச்சிக்கொல்லி மருந்துகள், கொசுவர்த்திச் சுருள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்துகள் விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது பூச்சிமருந்துச் சட்டம் 1968-இன்படி குற்றமாகும். வீட்டில் பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் கடைகளில் விற்பனை செய்ய உரிமம் பெறுவது அவசியமாகும். இதற்கு தேவையான உரிமத்தினை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பூச்சி மருந்துக்கு ரூ.500/- வீதம் அதிகபட்சம் ரூ.7500/- செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.
உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பூச்சிமருந்துச் சட்டம் 1968ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, அனைத்துப் பெட்டிக்கடை, மளிகைக்கடை மற்றும் பேரங்காடி விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் எனவும் பூச்சி மருந்துச் சட்டம் 1968-இன்படி உரிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்களைப் பராமரிப்பதோடு விற்பனை செய்வதற்கு உரிய பட்டியலையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் விற்பனை நிலையங்களில், வீட்டில் பயன்படுத்தும் பூச்சிமருந்துகளை
உணவுப்பொருட்களுக்கு அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் எனவும், மேலும் பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டு உபயோகப் பூச்சி மருந்துகளை விற்பனை
செய்யக் கூடாது எனவும், மேலும்
இது குறித்த விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர்,
புதுக்கோட்டை - 6381741240, கந்தர்வகோட்டை 9442275726, திருவரங்குளம் - 8072154306, கறம்பக்குடி - 9443826047, அறந்தாங்கி - 9442634852, ஆவுடையார்கோவில் - 9944669129, மணமேல்குடி - 9865012210, திருமயம் - 9843322167, அரிமளம் - 9486493224, பொன்னமராவதி - 9442684565, அன்னவாசல் - 9442516485, விராலிமலை - 9443839994, குன்றாண்டார்கோவில் - 9442933492 ஆகிய அலுவலர்களைத் தொடர்பு கொண்டு உரிமம் பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook இணையப்பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்....
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.