டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, பேட்டிங் செய்த பெங்களூரு அணி சென்னை சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலுக்கு தாக்குபிடிக்காமல் விக்கெட்களை பறிகொடுத்தது.
முதல் 3 விக்கெட்களை சாய்த்தார் ஹர்பஜன் சிங். அவரை தொடர்ந்து இம்ரான் தஹிரும் அசத்தலாக பந்துவீசி 3 விக்கெட்களை சாய்த்தார். பெங்களூரு அணி 17.1 ஓவரில் 70 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. ஹர்பஜன், இம்ரான் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, 71 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஆனால், சென்னை வீரர்களாலும் பெரிதாக அடிக்க முடியவில்லை. வாட்சன் 10 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். ரெய்னா 21 பந்தில் 19 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய அம்பத்தி ராயுடு 42 பந்துகளில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் சென்னை அணி, 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. கேதர் ஜாதவ் 13(19), ஜடேஜா 6(15) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணியில் சாஹல் 4 ஓவர்கள் வீசி வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
முதல் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து இருந்தனர். ஆனால், ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் டி20 போட்டி டெஸ்ட் போட்டியைப் போல மாறிவிட்டது. இருதரப்பு வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணறினர். பவுண்டரிகளே அரிதாகதான் அடிக்கப்பட்டது. சிக்ஸர்கள் சொல்லவே தேவையில்லை. நிறைய பந்துகள் டாட் பந்துகள் ஆனது. இதனால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக சென்னை அணியில் தோனி பேட்டிங் செய்யவே இல்லை.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.