சமீப காலமாக வளைகுடாவில் அதிக அளவில் இந்தியர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்ப சூழல் காரணமாக வளைகுடாவில் சம்பாதிக்கச் செல்லும் இந்தியர்களில் குறைந்த வருமானம் உள்ளவர்கள் பலர் சரியான அளவில் உடலை கவனிப்பதில்லை. சிறிய அறிகுறிகள் தெரிந்தாலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் சொந்த மருத்துவங்கள் மூலம் சரிசெய்ய முயல்கின்றனர். ஆனால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.வளைகுடா நாடுகளில் வேலை செய்து வரும் இந்தியர்கள் பெரும்பாலனோர் மாரடைப்பால் மரணமடைகிறார்கள்.
சமீப காலமாக அதிகரித்து வரும் இந்தியர்களின் மன உளைச்சலும் நோய் பாதிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. பல இடங்களில் சமூக அமைப்புகள் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. அதன் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பார்க்கும் போது சாதாரணமாக காணப்படும் இந்தியர்களின் உடலில் பல நோய்கள் தாக்குதல் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பாக சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
எனவே குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நல்ல உடல் நிலையில் இருந்தாலும், மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.