புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் எதிர்வரும் உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களுக்காக, வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கு 116 வாக்குச்சாவடிகளும், அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 30 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் கறம்பக்குடி பேரூராட்சியில் 16 வாக்குச்சாவடிகளும், எஞ்சிய அன்னவாசல், ஆலங்குடி, அரிமளம், இலுப்பூர், கீரனூர், கீரமங்கலம் மற்றும் பொன்னமராவதி ஆகிய 7 பேரூராட்சிகளிலும் தலா 15 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன.
கிராம ஊராட்சிகளைப் பொருத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3,807 வார்டுகளுக்கு 2,325 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியல்களின் மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்தை அறியும் கூட்டம் வரும் மார்ச் 18 முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும்.
இங்கு தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மார்ச் 25ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.