இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்



அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

நேற்று 25/03/2019 ராமநாதபுரம் அரண்மனை முன்பிருந்து அமைச்சர் டாக்டர் மணிகண்டன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர், ஆதரவாளர்களுடன் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஊர்வலமாக வந்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான வீரராகவராவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அன்வர்ராஜா எம்.பி., மாவட்ட அவை தலைவர் செ.முருகேசன், பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன் ஆகியோர் சென்றனர்.

Post a Comment

0 Comments