புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர, பொது நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் ஜிப்மர் எனும் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. இந்த கல்வி நிறுவனத்தில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 200 காலியிடங்களுக்கும், எம்.டி / எம்.எஸ் & எம்.டி.எஸ்- படிப்புகளுக்கு 90 காலியிடங்களுக்கும் இத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இந்த மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு நீட் தேர்வு எழுத தேவையில்லை. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் :
1. எம்.பி.பி.எஸ் (MBBS):
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி - 150 இடங்கள்
காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி - 50 இடங்கள்
மொத்தம் = 200 காலியிடங்கள்
2. எம்.டி / எம்.எஸ் & எம்.டி.எஸ் (MD / MS & MDS):
மொத்தம் = 90 காலியிடங்கள்
முக்கிய தேதிகள்:
1. எம்.பி.பி.எஸ் (MBBS):
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.04.2019, மாலை 05.00 மணி
தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்: 20.05.2019 முதல் 02.06.2019 வரை
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 02.06.2019
2. எம்.டி / எம்.எஸ் & எம்.டி.எஸ்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.04.2019, மாலை 05.00 மணி
தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்: 29.04.2019 முதல் 18.05.2019 வரை
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 18.05.2019
வயது வரம்பு:
எம்.பி.பி.எஸ் (MBBS): 31.12.2019 அன்றுக்குள் 17 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். 01.01.2003 -க்கு பிறகு பிறந்தவராக இருத்தல் அவசியம்.
தேர்வுக்கட்டணம்: (MBBS / M.D / M.S & MDS)
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.1,500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.1,200
என்.ஆர்.ஐ / ஓ.சி.ஐ பிரிவினர் - ரூ.3,000
மாற்றுத்திறனாளிகள் - தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.
ஆன்லைனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் முறை மூலம் தேர்வுக்கட்டத்தை செலுத்தலாம்.
கல்வித்தகுதி:
1. எம்.பி.பி.எஸ் (MBBS):
பிளஸ்-2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் போன்ற NCERT பாடப்பிரிவில் பயின்று 50% தேர்ச்சி பெற்றவர்களும், தற்போது பிளஸ்-டூ தேர்வெழுதுவோரும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
2. எம்.டி / எம்.எஸ்: (M.D / M.S ):
அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவ கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
3. எம்.டி.எஸ் (MDS):
அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல் மருத்துவ கல்வி நிறுவனத்தில் பிடி.எஸ் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
1. எம்.பி.பி.எஸ் (MBBS):
ஜிப்மரின், https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/60196/Registration.html - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
2. எம்.டி / எம்.எஸ் & எம்.டி.எஸ் (M.D / M.S & MDS):
ஜிப்மரின், https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/60114/Registration.html - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு முறை: எம்.பி.பி.எஸ் (MBBS):
கணினி வழித்தேர்வு மூலம் இந்த நுழைவுத்தேர்வு நடைபெறும்.
ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு வினாக்கள் அமையும்.
இயற்பியலில் 60 வினாக்களும், வேதியியலில் 60 வினாக்களும், உயிரியலில் 60 வினாக்களும், ஆங்கில மொழியில் 10 வினாக்களும், திறனாய்வில் 10 வினாக்களாக, மொத்தம் 200 வினாக்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
MBBS
(https://drive.google.com/file/d/1lgIYu2DQjVAQaxAQo5ho9sZG3nC1zs_r/view)- என்ற இணையதளத்திலும்
M.D&M.S - (http://jipmer.edu.in/sites/default/files/MD%20MS%20Prospectus%202019%20Session.pdf) - என்ற இணையதளத்திலும் சென்று பார்க்கலாம்.
Facebook Like: https://www.facebook.com/gopalappattinamblog/
Facebook Like: https://www.facebook.com/gopalappattinamblog/
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.