கோபாலப்பட்டினத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கான (13/04/2019) மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம்



தற்போதைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. குறிப்பாக மிக குறுகிய காலத்தில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் அனைவரும் அறிந்ததே.

மீமிசல் சுற்றுவட்டார தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு. நமது கிழக்கு கடற்கரை பகுதிகளில் இதுவரை  யாரும் நடத்திடாத அரிய நிகழ்ச்சி. பெண் பேச்சாளர்களை வைத்து பெண்களுக்காக நடத்தப்படும் மாபெரும் விழிப்புணர்வு மற்றும் கல்வி வழிகாட்டி பயிற்சி கருத்தரங்கம். இன்ஷா அல்லாஹ் இறைவனின் அருளால் எதிர்வரும் 13/04/2019 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மீமிசல் SP.மடம் MKR. ராசி திருமண மஹாலில் நடைபெறவிருக்கிறது.

அதுசமயம் தமிழகத்தில் தலைசிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் மநோதத்துவ நிபுணர் சகோதரி திருமதி. ரேகா பத்மநாபன் அவர்கள் தற்பொழுது சமுதாயத்தில் நடைபெறும் பாலியல் தீண்டலிலிருந்து பெண்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் பாலியல்  தீண்டலிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, பெண் கல்வியின் முன்னேற்றம், பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைகள் மற்றும் மனநலம் சார்ந்த விஷயங்கள் பற்றி தங்களிடம் கலந்துரையாடுகிறார்.

மேலும் ஆலிமா.S.நஜ்மா M.A.,(Eng) M.A., (Arab) அவர்கள் பெண்களின் வாழ்வில் கல்வியின் அவசியம் குறித்து விரிவான ஆலோசனை வழங்குகிறார்.

கோபாலப்பட்டினம் இளைஞர்களின் பெரும் முயற்சியால் எவ்வித வியபார நோக்கமுமின்றி நம் பகுதி பெண்களின் முன்னேற்றத்தை மட்டுமே முழு குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படும் இந்நிகழ்வில் சுற்றுவட்டார தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதுசமயம் இந்நிகழ்வில் மீமிசல்,ஆர்.புதுப்பட்டினம், ஏம்பக்கோட்டை, ஆலத்தூர், செய்யானம், கீழஏம்பல்,அரசநகரிப்பட்டினம், முத்துக்குடா, பொய்யாதநல்லூர், SP பட்டினம்,பாசிபட்டிணம், தொண்டி, குமரப்பன்வயல், பாலாக்குடி, ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், புதுக்குடி, ஆதிபட்டினம், அம்மாப்பட்டிணம், புதுக்குடி, மணமேல்குடி, கிருஷ்ணாஜிபட்டினம்,வடக்கு அம்மாப்பட்டினம், கட்டுமாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் தாய்மார்கள் மற்றும் மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு:

1.ஆண்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.
2.மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3.அனுமதி இலவசம்.

நிகழ்ச்சி ஏற்பாடு:

மைத்தாங்கரை இறுதிவீடு,
வாட்ஸ்அப் குழுமம்,
கோபாலப்பட்டினம்.

Media Partner
GPM Media Team
www.gopalappattinam.com

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் சமூக இணையப்பக்கத்தை Like, Follow மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்





Post a Comment

0 Comments