கோபாலப்பட்டினத்தை சேர்ந்த உதயம்.J.தாஹீர் அவர்கள் மீமிசல் தொடக்க கூட்டுறவு வங்கி சங்கத்தின் புதிய தலைவராக பதவியேற்பு



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் தொடக்க கூட்டுறவு வங்கி சங்க தேர்தல் 29/03/2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்ததலில் மொத்தம் 17- பேர் போட்டியிட்டனர். இதில் சங்கத்தின்  உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்தனர்.

இதன் வாக்கு எண்ணிக்கை 30/03/2019 அன்று எண்ணப்பட்டது. இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த உதயம். J.தாஹீர் அவர்கள் அதிக வாக்குகள் பெற்று (797-வாக்குகள்) வெற்றிபெற்றார். இதனையடுத்து நேற்று 03/04/2019 உதயம். J.தாஹீர் அவர்கள் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

கூட்டுறவு வங்கி சங்க தேர்தல் யாருக்காக?...

தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் உள்ள விவாசாயிகளுக்கு உதவும் நோக்கத்துடன் அவர்களைக் கொண்டு கூட்டுறவு அமைப்பின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்படுகின்றன. இந்த அமைப்பிற்கு தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் செயலாளர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இயக்குனர்களாகவும் அவர்களிலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட தலைவரும் உள்ளனர். இவர்கள் எடுக்கும் முடிவுகளின்படி இந்த வங்கிகள் செயல்படுகின்றன.

Post a Comment

0 Comments