நாளை மறுநாள் 19-ஆம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்..!!



கடந்த மாதம் நடந்து முடிந்த பிளஸ்2 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடந்தது. இதுவரை நடைமுறையில் இருந்து வந்த 1200 மதிப்பெண் என்ற முறையை மாற்றி 100 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் மேற்கண்ட தேர்வு நடந்தது. அதேபோல, மார்ச், ஜூன் மாதங்களில் நடந்த பிளஸ் 1 தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019ல் மாணவர்கள் எழுதினர். மேற்கண்ட இரண்டு தேர்வுகளுக்கான முடிவுகள் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வுத்துறை வெளியிடுகிறது.

மேற்கண்ட தேர்வுகளை தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு பிறகு தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். தனித் தேர்வர்கள் தாங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது கொடுத்த செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

சிறப்பு துணைத் தேர்வு, கடந்த மாதம் நடந்த பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது.

பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது…

Post a Comment

0 Comments