இந்தியா முழுவதுமுள்ள 100-க்கும் மேற்பட்ட திரைப்பட இயக்குநர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
நம்முடைய ஜனநாயகத்துக்காக நாம் துணை நிற்கவேண்டிய முக்கியமான நேரம் இது என்று நினைக்கிறேன். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்தக் கட்சி நம் ஜனநாயகத்தை முழுவதுமாக அழித்துவிடும் என்று நினைக்கிறேன்.
மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவரும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில், பா.ஜ.க மிகப் பெரிய அளவில் நெருக்கடி அளிக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட இயக்குநர்களும், 200-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கவேண்டாம் என்று பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இன்தி நேம் ஆப் காட் உள்ளிட்ட ஆவணப் படங்களின் இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன், எஸ் துர்கா படத்தின் இயக்குநர் சணல்குமார் சசிதரன் மற்றும் இயக்குநர் ஜிஜூ அன்டனி பா.ஜ.கவுக்கு எதிரான இந்த ஆன்லைன் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
அவர்களுடைய இந்தப் பிரச்சாரத்துக்கு 124 இயக்குநர்கள் கையெழுத்திட்டு ஆதரவளித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த சணல்குமார், ‘நம்முடைய ஜனநாயகத்துக்காக நாம் துணை நிற்கவேண்டிய முக்கியமான நேரம் இது என்று நினைக்கிறேன். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்தக் கட்சி நம் ஜனநாயகத்தை முழுவதுமாக அழித்துவிடும் என்று நினைக்கிறேன்.
அவர்கள், மிருகத்தனமான சிந்தனைகளை திணிக்கிறார்கள். அரசு அமைப்புகளின் முக்கியப் பதவிகளை தகுதியற்ற நபர்களை நியமித்துள்ளனர். இந்த அரசை எதிர்ப்பதற்கான இடம் இங்கு இல்லை’ என்று தெரிவித்தார். சணல்குமார் சசிதரன் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஆவர்.
அதேபோல, இந்திய அளவிலுள்ள எழுத்தாளர்களும் பா.ஜ.க எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், வெறுப்பு அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பன்முகத்தன்மை மற்றும் சமத்துவ இந்தியாவுக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற எழுத்தாளர்கள் முன்னெடுத்த கோரிக்கையில் 210 எழுத்தாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதில், இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களான கிரிஸ் கர்நாட், அருந்ததி ராய், அமித்வ் கோஷ், பாமா, நயன்தாரா சாஹல், விவேக் சாஹன்பக், ரொமிலா தாப்பர் உள்ளிட்டவர்களும் அடங்கும்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.