5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவரை தேர்வு செய்ய ஒரு விரல் புரட்சி செய்வோம்!!!



கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று 18/04/2019 வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது.

அடுத்த ஐந்தாண்டுகள் நாட்டை ஆளப்போவது யார் என்பதற்கான மிக முக்கிய ‘ஒரு விரல் புரட்சி’ செய்யும் நாள் இன்று. ஒவ்வொருவரும் மறக்காமல், எந்த வேலையாக இருந்தாலும் வாக்குச்சாவடிக்கு போய்  வாக்களிக்க தவறாதீர்கள்.

அதுசமயம் வாக்களிக்க தகுதி பெற்ற முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் மற்றும் ஒரு சில காரணங்களால் வாக்களிக்க தகுதி இருந்தும்  வெளிநாடுகளில் வாழ்க்கையை கழித்து தற்போது வாழ்க்கையில் முதல் முறையாக வாக்களிக்க கூடிய சகோதரர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் வாக்களித்துவிட்டு உங்கள் ஒரு விரல் புரட்சியை எங்களுக்கு புகைப்படங்களாக எடுத்து அனுப்பி வையுங்கள். நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் அனைத்தும் எங்களது கோபாலப்பட்டினம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த முயற்சியானது உள்நாட்டிலேயே இருந்து கொண்டு வாக்களிக்கத்தவர்களை ஆர்வம்முட்டும் வகையில் வரக்கூடிய தேர்தலில் வாக்களிக்க வைக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும்.

குறிப்பு : இந்தியா நேரப்படி மாலை 6.00 மணிக்குள் புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

நீங்கள் புகைப்படங்கள் அனுப்ப வேண்டிய வாட்ஸ்ஆப் எண்:


மற்றும் எங்கள் மீடியா வாட்ஸ்ஆப் குழும அட்மின்களுக்கும் அனுப்பி வைக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்:
GPM MEDIA TEAM
GOPALAPATTINAM 

Post a Comment

0 Comments