கோபாலப்பட்டினத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தீவிரம் !!



கோபாலப்பட்டினத்தில் காலை 7 மணி முதலே நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

பகல் 1 மணிக்கு மேல் வாக்குப்பதிவு திடீரென மந்தமானது. கோடை வெயில் கொழுத்தியதால், வாக்காளர்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

இந்நிலையில் வெயில் சற்று குறைந்துள்ளதாலும், வாக்குப்பதிவு நேரம் முடிவடைய உள்ளதாலும், தற்போது வாக்குச்சாவடிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வாக்காளர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments