புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் 74.01 % வாக்குப்பதிவு



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, விராலிமலை, திருமயம், கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 76 ஆயிரத்து 490 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு செய்வதற்காக மொத்தம் ஆயிரத்து 537 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதில் பதற்றமாக வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 521 பேர் வாக்களித்தனர். இது 74.01 சதவீதம் ஆகும். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 70.57 சதவீதமும், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 75.58 சதவீதமும், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 79.82 சதவீதமும், திருமயத்தில் 73.01 சதவீதமும், ஆலங்குடியில் 77.18 சதவீதமும், அறந்தாங்கியில் 68.74 சதவீதமும் வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 79.82 சதவீதமும், குறைந்தபட்சமாக அறந்தாங்கியில் 68.74 சதவீதமும் வாக்குகள் பதிவானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலைவிட 2.35 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments