தமிழகத்தில் வருகிற 18-ந் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் முன்கூட்டியே தங்களுடைய வாக்குகளை அளிப்பதற்காக தபால் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடங்கியது. முன்னதாக வாக்களிப்பவர்களுக்கு விண்ணப்ப படிவம் எண் 12 தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய அதிகாரியிடம் கையெழுத்து பெற்று, தபால் வாக்குச்சீட்டை, அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனர்.
மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி தபால் வாக்குகளை அளித்தனர். முன்னதாக அங்கிருந்த அதிகாரிகள் தபால் வாக்களிக்க வந்த போலீசாரின் ஆவணங்களை சரிபார்த்த பின்னரே அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர்.
போலீசார் தபால் வாக்குகளை செலுத்துவதை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.