புதுக்கோட்டையில் கடந்த 2017-ம் ஆண்டு புதிய மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்கியது. அப்போது புதுக்கோட்டையில் செயல்பட்ட முத்துலெட்சுமி ரெட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகியவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.
இதனால் இந்த 2 மருத்துவமனைகள் செயல்பட்டு வந்த கட்டிடங்களும் காலியாகவே இருந்தன. இதில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வந்த கட்டிட வளாகத்தில், ரூ.20 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை, நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே திறந்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து படிப்படியாக வெளிநோயாளிகள், உள்நோயாளிகள், அறுவை சிகிச்சை அரங்குகள் போன்ற பிரிவுகள் செயல்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில், ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையை மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த மாதம் 5-ந் தேதி ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை திறக்கப்பட்டது. அதன் பிறகு, உள்நோயாளிகள் பிரிவும், அறுவை சிகிச்சை பிரிவுகளும் செயல்பட தொடங்கி உள்ளன. மகப்பேறு சிகிச்சைக்கு தேவையான அனைத்து பரிசோதனை வசதிகளும் இவ்வளாகத்திலேயே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இம்மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார். இந்த ஆய்வின்போது நிலைய மருத்துவ அலுவலர் ரவிநாதன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.