கத்தாரில் நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்கான ஆசிய அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று தகுதிப் போட்டிகள் ஜூன் 6, 11 தேதிகளில் நடைபெற உள்ளன.
உலக கோப்பை கால்பந்து போட்டியின் 22-வது தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி தொடங்குகிறது.இதில் ஆசிய(ஆசியா- ஓசியான்) கண்டத்தில் இருந்து 5 நாடுகள் பங்கேற்க அனுமதிக்கப்படும்.
ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் நாடு நேரடியாக தகுதி பெறும். இப்போது நடப்பு சாம்பியன் என்றமுறையும், போட்டி நடத்தும் நாடு என்ற அடிப்படையிலும் கத்தார் ஏற்கனவே தகுதிப் பெற்று விட்டது.அதனால் எஞ்சிய நாடுகளை தேர்வு செய்வதற்கான தகுதிப் போட்டிகள் ஆசிய நாடுகளிடையே நடைபெறும்.
ஆசிய கண்டத்தில் உள்ள 46 நாடுகள் இந்த தகுதிப் போட்டியில் பங்கேற்கும். தகுதிப் போட்டிகள் 4 சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்றில் 35 முதல் 46 ரேங்கில் உள்ள நாடுகள் மட்டும் விளையாடும்.
தொடர்ந்து நடைபெறும் 2-வது சுற்றில் ஒன்று முதல் 34-வது ரேங்க் வரை உள்ள நாடுகள் விளையாடும. முதல் சுற்றில் தகுதிப் பெற்ற நாடுகளும் 2-வது சுற்றில் விளையாடும். அதில் தகுதிப் பெறும் அணிகள் 3, 4-வது என அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும். அதன்படி முதல் சுற்றில் விளையாட உள்ள 12 நாடுகளுக்கான போட்டி அட்டவணையை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி மங்கோலியா-புருனே, மாக்காவ் - இலங்கை, லாவோஸ் - வங்காளதேசம், மலேசியா - திமோர், கம்போடியா - பாகிஸ்தான், பூடான் - குவாம் ஆகிய நாடுகள் ஜூன் 6, 11 தேதிகளில் மோதும். ஒவ்வொரு நாடும் தலா 2 போட்டிகளில் விளையாடும்.
உதாரணமாக மங்கோலியா - புருனே மோதும் போட்டிகளில் முதல் போட்டி மங்கோலியாவிலும், 2வது போட்டி புருனேவிலும் நடக்கும்.இந்த 12 அணிகளில் இருந்து தகுதிப் பெறும் 6 அணிகள் 2வது சுற்றுக்கு முன்னேறும். அந்த 2வது சுற்றில் நேரடியாக பங்கேற்க உள்ள 34 நாடுகளின் ஈரான், ஜப்பான், தென் ெகாரியா, ஆஸ்திரேலியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, ஈராக் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. அதில் இந்தியா 18வது இடத்தில் உள்ளது. முதல் சுற்று போட்டிகள் முடிந்ததும் 2வது சுற்றில் எந்த நாடு எந்த நாட்டுடன் மோதும் விவரங்கள், தேதிகள் அறிவிக்கப்படும்.
ஆனால் போட்டி நடைபெறும் காலத்தை மட்டும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அதன்படி 2வது சுற்றுக்கான போட்டிகள் 2019ம் ஆண்டு செப்.5ம் தேதி முதல் 2020ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி வரையில் நடைபெறும். மூன்றாவது சுற்று 2020 செப்டம்பர் முதல் 2021 அக்டோபர் வரையிலும், கடைசி மற்றும் 4வது சுற்று 2021 நவம்பரில் நடக்கும்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.