புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை



யாரையும் இழிவுபடுத்தும் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது :

பொன்னமராவதி பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தேன். தற்போது அந்தப் பகுதிகளில் 800 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்புடையோரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதிகளில் அமைதி நிலவுகிறது. யாரையும் இழிவுபடுத்தும் வகையில் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொன்னமராவதி வட்டத்தில் வரும் 21ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார் உமாமகேஸ்வரி.

Post a Comment

0 Comments