புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகள் பொதுத்தேர்வு முடிவுகளை வைத்து விளம்பரம் தேடக்கூடாது: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை!



பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவில் சிறப்பிடம் பெற்றதாக மாணவர்களின் படங்களைப் போட்டு விளம்பரம் செய்யக் கூடாது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது அரசுக்கு  கொண்டுவரப்பட்ட புகார்களின் அடிப்படையிலும், மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களைக் குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழல்களைத் தவிர்க்கும் வகையிலும், கடந்த 2016-17 ஆம் கல்வி ஆண்டு முதல்  பள்ளிப் பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறையை  கைவிட அரசு ஆணையிட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையின் நோக்கத்திற்கு மாறுபட்ட வகையில் புதுக்கோட்டை  மாவட்டத்தில் ஒரு சில மாணவர்களின் பெயர் மற்றும் போட்டோ கொண்ட விளம்பரங்கள், பதாகைகள் போன்றவற்றை சில பள்ளிகள் மேற்கொள்வதாகத் தகவல் வருகின்றன. இதில், அரசாணையின்படி செயல்படாத பள்ளிகள் மீது விதிகளின்படி துறை சார்ந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எந்தப் பள்ளியாவது மாணவர்களின் பெயர் மற்றும் போட்டோ கொண்ட பதாகைகள் வைத்திருந்தால்  உடனடியாக அகற்ற வேண்டும்

Post a Comment

0 Comments