டெல்டா மாவட்ட கடலோர பகுதியான கட்டுமாவடி தொடங்கி மீமிசல் அடுத்த ஏனாதி வரையிலான 32 கிமீ நீளம் கொண்டது.
கட்டுமாவடி, வடக்கு அம்மாப்பட்டினம், பொன்னகரம், ஆவுடையார்பட்டினம், புதுக்குடி, முத்துக்குடா, மீமிசல்,கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம் போன்ற பகுதிகளில் மட்டும் சுமார் 4000க்கும் அதிகமான நாட்டுப்படகு மீனவர்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் 2000 க்கும் அதிகமான விசைப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். பொதுவாகவே இந்தப் பகுதிகளில் ஆழம் குறைந்த சதுப்பு நிலப்பரப்பு காணப்படுகிறது. இங்கு அதிகமான பகுதிகளில் குறைந்த அளவில் அலையாத்தி மரங்களை கொண்ட அலையாத்திக் காடுகள் காணப்படுகின்றன.
இவை பொதுவாக கடலோர பகுதிகளில் காணப்படுவதுடன், இவை இருக்கும் இடங்களில், அலை அதிகமான கடல்நீரானது மரங்களினிடையே சென்று, அலைகள் குறையப்பெற்று, மிக மெதுவாக நகரும் ஆறுகள் போன்ற நீர்நிலையாக இருப்பதனால் இவை அலையாத்தி காடுகள் எனவும் அழைக்கப்படும். அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும்.
இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு எனப்படும். நிலமும் கடலும் சேரும் பகுதிகளில், சில இடங்கள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும்.
அலையாத்தித் தாவரங்கள் இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இவை வளரும் இடங்கள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மாங்குரோவ் காடுகள் என்றும் கூறப்படுகிறது. இத் தாவரங்கள் செறிந்து வளர்ந் திருக்கும் இடத்தில் நீரானது மரங்களைச் சூழ்ந்து காணப்படுவதனால், அதாவது வெள்ளம் நிறைந்திருக்கும் இடம்போன்று தோற்றம் தருவதனால், வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.அலையாத்தித் தாவரங்களில் கிட்டத்தட்ட 80 வேறுபட்ட இனங்கள் இருப்ப துடன், இவை ஆக்சிஜன் குறைவான மண்ணில் வளரும் தன்மை கொண்டிருப் பதாகவும், நிலநடுக் கோட்டுக்கு அண்மையாக இருக்கும், வெப்ப மண்டலம், அயன அயல் மண்டலம் பகுதிகளிலேயே வளரும் என்றும் அறியப்படுகின்றது. மிகவும் கடினமான, சூழலை தாங்கும் தன்மை கொண்ட ஒரு சில இனங்கள் மட்டுமே மிதவெப்ப மண்டலத்தில் வாழும் தன்மை கொண்டிருக்கின்றன.
இவற்றில் சிறிய செடிவகைகள் முதல், கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் மரங்களான 60 மீட்டர் உயரம் வரை வளரும் மரங்கள் வரை அடங்கும். இத்தா வரங்களின் வேர்கள் நீருக்கு மேலாக அடர்ந்து தெரிவதுடன், கடற்கரை ஓரங் களில், கடல் அலையினால் ஏற்படக்கூடிய மண்ணரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கடற்கரை பகுதிகளை பாதுகாக்கும் இயற்கை உயிர் அரண்களாக அலையாத்திக் காடுகள் விளங்குகின்றன. இவை புயல், ராட்சத அலை, பருவகால மாற்றம், அலை உயர்வு செயல்கள் மற்றும் கடல் அரிப்பு போன்ற கடற்கரை தீமைகளின் போது வேகத்தடைகளாக சேவை புரிந்து கடற்கரையில் உள்ள பகுதிகளை பாது காக்கின்றன. மீன், இறால், நண்டு மற்றும் நத்தைகள் இனப்பெருக்கம் செய் யும் உற்பத்தி தளமாகவும் அலை யாத்திக்காடுகள் விளங்குகின்றன.
பல்வேறு வகையான உயிரினங்கள் பல்லுயிர் பெருக்கம் செய்யவும், இடம்பெறச் செய்யவும் ஏதுவான பகுதியாக அலையாத்தி காடுகள் இருக்கின்றன. உயிரினங் களுக்கு உணவு வளையமாகவும் இவை விளங்குகின்றன. காற்றில் கலந்துள்ள நச்சுகளை போக்கி, தூய்மையான காற்றையும் அலையாத்தி காடுகள் வழங்குகின்றன.
இயற்கை சூழலுக்கும், மனித சமூகத்துக்கும் மிகப்பெரிய அளவில் பயன்தரும் அலையாத்திக் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சி என்ற பெயரிலும், நடைபாதை வழித்தடங்களுக்காகவும், வெளித்துறைமுக விரிவாக்க திட்டங்களுக்காகவும், அலையாத்தி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் கட்டுமாவடி, வடக்குஅம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், முத்துக்குடா போன்ற பகுதிகளில் சிறிய அளவிலான அலையாத்தி மரங்கள் உள்ளன. தற்போது இம் மரங்கள் அனைத்தும் அழியும் தருவாயில் உள்ளது. பொது மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அழிவுப் பாதையில் செல்கிறது.
இம்மரத்தின் இலை, தழைகள் ஆடு, மாடுகளுக்கு தீவனங்களாகவும், இதன் கிளைகள் விறகுக்காகவும் வெட்டப்படுகின்றன. இதனால் இம் மரங்கள் குறைந்து அலையாத்தி காடுகள் அழிந்து வருகின்றன. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாகும்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.