ஆவுடையார்கோவில் மேல 2-ம் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 55). இவருக்கு தலைவலியும் கண்பார்வை குறைபாடும் இருந்த காரணத்தால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு இடது பக்க மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மூளையில் உள்ள புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டு கடந்த 13-ந் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையை தலைமை மயக்க மருத்துவர் ரவிக்குமார், மருத்துவர் சரவணன் ஆகியோர் நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தினர். மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு.ஸ்டாலின் ராஜ்குமார் மற்றும் உதவி மருத்துவர் பாரதிராஜா, செவிலியர் ஜெயமேரி பெல்சிதா ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
விரைவில் மின்சார ரம்பம் வாங்கப்படும்
அறுவை சிகிச்சையின்போது இடது பக்க மூளையின் முன்பகுதி மற்றும் நடுபகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி வலது பக்க மூளையை அழுத்தி கொண்டிருப்பது தெரியவந்தது. மிகவும் கவனமான முறையில் அக்கட்டி அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கட்டி திசு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பொன்னம்மாள் முழு ஆரோக்கியத்துடன் நேற்று மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றார். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பொன்னம்மாளை மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் நேரில் பார்த்து, சிகிக்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் பொன்னம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரை பாராட்டினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், மூளை புற்று நோயானது இளையவர், வயதானவர் என்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த நோயாளிக்கு வலது பக்க மூளையையும், கண் பார்வை நரம்புகளையும் கட்டி அழுத்தி கொண்டிருந்தது. இதனால் அவருக்கு தலைவலியும் கண்பார்வை குறைபாடும் ஏற்பட்டது. இதை சரிசெய்யாத பட்சத்தில் இதயம் மற்றும் சுவாசத்தை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி அழுத்தப்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் முதுகு தண்டுவடம் மற்றும் மூளை அறுவை சிகிச்சையினையும் செய்வதற்கான கட்டமைப்பு உள்ளது. விரைவில் மண்டை ஓட்டினை எளிதில் பிளப்பதற்காக மின்சார ரம்பம் வாங்கப்படும் என்றார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.