புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எரிய கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பிளாஸ்டிக்பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு, இதன் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அதனை முறையாக சேகரித்தும், இவ்வாறு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது அறிவிப்பு பலகைகள் வைக்கவும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பை மற்றும் மூங்கில் தட்டுகளை உபயோகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் உபயோகத்தின் மாற்றுப் பொருள் பயன்பாட்டை விளக்கமாக எடுத்துரைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க தொடர்ந்து கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகள் எடுத்து செல்லுதல் போன்ற பழக்கங்களை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளித்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடற்ற மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை திகழ செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.