தமிழ்நாட்டில் இனி வீடு கட்ட வேண்டும் என்றால் அரசுப் பதிவு பெற்ற இஞ்சினியர்களின் சான்றிதல் பெறுவது கட்டாயம்



தமிழ்நாட்டில் இனி வீடு கட்ட வேண்டும் என்றால் அரசுப் பதிவு பெற்ற இஞ்சினியர்களின் சான்றிதல் பெறுவது கட்டயாமக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சட்டங்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் தான் இருந்தது. 

தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற முகலிவாக்கம் கட்டிட விபத்தை யாரும் மறைந்திருக்க மட்டார்கள். அது அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு மிகவும் பின்னடவை ஏற்படுத்தியது.

அதன் பிறகு தமிழ்நாட்டில் கட்டடங்கள் கட்டுவது குறித்து தமிழக அரசு புதிய விதிமுறைகளை விதித்து 2019-ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 4-ம் தேதி புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது.

தமிழக அரசு வெளியிட்ட அந்த அறிவிப்பின் படி இனி தமிழ்நாட்டில் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் தமிழக அரசின் பதிவு பெற்ற பொறியாளரின் சான்று பெற்ற பிறகே குடிபெயர முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

எனவே வீட்டிற்கான திட்டம், வடிவமைப்பு, கண்காணிப்பு, தரக் கட்டுப்பட்டு, திட்ட அனுமதி போன்றவை தனது மேற்பார்வையின் கீழ் தான் நடைபெற்றது என்று இஞ்சினியர் ஒருவர் உறுதிசெய்ய வேண்டும்

இப்படி அனைத்து அனுமதிகளையும் பெற்றுவிட்டு கட்டப்பட்ட வீடு ஒன்றில் விரிசல் ஏற்பட்டால், இடிந்து விழுந்தால் அதற்குச் சம்மந்தப்பட்ட இஞ்சினியர் தான் பொறுப்பு. அவரது இஞ்சினியர் உரிமை பரிக்கப்படும், மிகப் பெரிய இழப்பு என்றால் சிறக்கு கூடச் செல்ல நேரிடும்.

இதுபோன்ற சட்டங்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் தான் இருந்தது. தற்போது இந்த விதிகள் தமிழ்நாட்டிற்கும் வந்துள்ளது.

அதன்படி, 12 மீட்டர் உயரத்துக்குள் இருக்கும் ஒரு கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்றால் அதற்குப் பதிவுபெற்ற கட்டட கலை நிபுணர் அல்லது பதிவுபெற்ற பொறியாளரின் அனுமதியை பெற வேண்டும். 12 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டு கட்டிடங்கள் என்றால் டெவலப்பரிடம் அனுமதி பெற வேண்டும்.

இவர்கள் மட்டுமல்லாமல் ஸ்ட்ரக்சுரல் இஞ்சினியர், கன்ஸ்ட்ரக்‌ஷன் இஞ்சினியர் அல்லது இந்திய அளவிளான ஜியோ டெக்னிக்கல் இஞ்சினியர் உள்ளிட்டவர்களாலும் கட்டித்திற்கான ஆய்வுகளை நடத்தி அனுமதிகளை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments