ஆவுடையார்கோவில் அரசு கல்லூரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அரசுக் கலை கல்லூரியில் இறுதிக் கட்டக் கலந்தாய்வு வரும் 20-ம் தேதி நடைபெறும் என கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.சுகந்தி அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 பெருநாவலூர் அரசுக் கலை கல்லூரியில் 2019- 2020 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 3 முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது.

 கலந்தாய்வில் தேர்வு பெறாத மாணவ, மாணவிகளில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு  விண்ணப்பித்த  அனைத்து மாணவ மாணவிகளுக்கும்  ஜூன் 20ம் தேதி  காலை 10 மணிக்கு இறுதி கட்ட கலந்தாய்வு  நடைபெறுகிறது.

ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு பி.எஸ்.சி கணிதம், பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்  இறுதி கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு  நடைபெற உள்ளது. 

Post a Comment

0 Comments