புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கிளை-1 சார்பில் ஒழுக்கப் பயிற்சி வகுப்பான ‘தர்பியா’ நிகழ்ச்சி நேற்று (18.01.2026) தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.
இந்த சிறப்புப் பயிற்சி வகுப்பிற்கு கிளைத் தலைவர் ராசிக் தலைமை தாங்கினார். செயலாளர் முகமது இக்பால், பொருளாளர் யூசுப், துணைச் செயலாளர் ஆதில், மருத்துவ அணி செயலாளர் நிகால் மற்றும் மாணவரணி நியாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலப் பேச்சாளர் A.அபூபக்கர் MISC, ஆலிமாக்கள் ஆயிஷா பானு மற்றும் பாஸிலா ஆகியோர் கலந்துகொண்டு இஸ்லாமிய வாழ்வியல் மற்றும் நற்பண்புகள் குறித்து சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் குறித்து 11 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
ராக்கெட் ஏவுவதில் ஊழலா?
1.பிரதமர் அலுவலகத்தின் முறைகேடுகளால் உலகப்புகழ்பெற்ற இந்தியாவின் இஸ்ரோ(ISRO)நிறுவனத்தின் செயல்பாடுகள் சமீபகாலமாக பாதிக்கப்பட்டுள்ளன, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுறை, உள்ளிட்ட தலைசிறந்த விஞ்ஞானிகள் பணியாற்றிய ISRO வால் இதுவரை ஏவப்பட்ட PSLV செயற்கைகோள்கள் 90 சதவீதத்திற்கும் மேலாக வெற்றியே பெற்றுள்ளன, ஆனால் கடந்த 6 தடவை ஏவப்பட்ட பல்வேறு செயற்கைகோள்களில் மூன்று தோல்வியடைந்துள்ளது, ISRO வரலாற்றில் இப்படிப்பட்ட தொடர் தோல்விகள் இருந்ததில்லை, அதே நேரத்தில் தோல்வியை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இதுவரை வெளியிடாமல் பிரதமர் அலுவலகம் மவுனம் காப்பதும் , தோல்விக்குக்கு காரணமான பாகங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தினுடையது என்பதும் மேலும் சந்தேகத்தை எழுப்புகின்றன, மக்களின் வரிப்பணத்தை பாழாக்கும் வகையிலும், முறைகேடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் செயல்படும் மோடியின் அரசை இந்த கூட்டம் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
சந்ததிகளை அழிக்கும் சாராய விற்பனை
2. பொங்கல் தினத்தை ஒட்டிய இரண்டு நாட்களில் மட்டும் 518 கோடி ரூபாய்க்கு மது விற்பனை தமிழகத்தில் நடந்துள்ளதாகவும், சென்னை மது விற்பனையில் தமிழகத்திலேயே முதலிடம் என்று செய்திகள் வருகின்றன, குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக நேரம் செலவழிக்க வேண்டிய விடுமுறைக்காலங்களில் கூட அவர்களை போதை வயப்படுத்தி அதன் மூலமாக வருமானத்தை ஈட்டுவது மிகவும் அவமானகரமான ஒரு செயல், பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த மதுவை தமிழகத்தில் முழுமையாக தடை செய்ய வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்.
திருப்பரங்குன்றம் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு
3.திருப்பரங்குன்றம் மலை சம்பந்தமாக தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்யும் டிவிஷன் பெஞ்சின் சமீபத்திய தீர்ப்பு பெருத்த ஏமாற்றமளிக்கிறது, நூறாண்டுகளாக இருக்கும் ஹிந்து மக்களின் பழக்கத்திற்கும் , முன்னர் வந்த தீர்ப்புகளுக்கும் எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக பெரும்பான்மை ஹிந்து மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு எதிராகவும் சங்க பரிவார சக்திகளின் எண்ணத்திற்கு ஆதரவாகவும் இத்தீர்ப்பு அமைந்துள்ளது நடுநிலையாளர்களின் உள்ளத்தில் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.
தமிழக மக்களிடம் நிலவும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
இடஒதுக்கீடு கோரிக்கை
4.கடந்த தேர்தலின் போது இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது, இஸ்லாமியர்களின் நெடு நாளைய கோரிக்கையை நிறைவேற்றாமல் மறு தேர்தலை நோக்கி இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது, போராட்டம் நடத்தினால்தான் கோரிக்கைகள் செவியேற்க்கப்படும் என்பது நல்லாட்சிக்கு சான்று கூறாது, எனவே வரும் தேர்தலுக்கு முன் சிறுபான்மை இஸ்லாமியர்களின் ஜீவாதார கோரிக்கையான இட ஒதுக்கீட்டை குறைந்தப்பட்சம் 5 சதவீதமாக அதிகரித்து தருவதன் மூலம் மட்டுமே இஸ்லாமியர்களின் ஏகோபித்த ஆதரவை இக்கூட்டணி பெற முடியும் என இந்த கூட்டடம் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்.
SIR முறைகேடுகள்
4.தமிழகத்தின் SIR வரைவுப்பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் சுமார் 97 இலட்சம் வாக்காளர்கள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளனர், பிஹாரைப்போன்று சிறுபான்மை, ஏழை மக்களின் வாக்குகளை நீக்குவதன் மூலம் தங்களின் வாக்கு சதவீதத்தை பாஜக அதிகரித்து கொள்ள தேர்தல் ஆணையம் உதவுகிறதோ எனும் கேள்வி எழுகிறது, மேலும் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள நேரம் முடிந்துள்ள சூழலில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் பெயர்களை இணைப்பதற்கு விண்ணப்பித்தும், தேர்தல் ஆணையத்திற்கு உரிய விளக்கம் அளித்தும் உள்ளனர், ஆகவே பிப்ரவரியில் வெளியாகும் வரைவுப்பட்டியல நேர்மையுடன் வெளியிடப்பட வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியர்களுக்கெதிராக பரவும் வெறுப்பு
6.உலகம் முழுவதும் சில வருடங்கள் முன்வரை கண்ணியமான முறையில் கையாளப்பட்ட இந்தியர்கள் , சங்க பரிவாரங்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் செய்யும் ரவுடித்தனத்தால்
பெரிய வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியர்களுக்கெதிரான போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன, மேலும் பல நாடுகளை இந்தியர்களை திருப்பி அனுப்பவும் ஆரம்பித்துள்ளன, இது ஆளும் ஒன்றிய அரசின் தோல்வியையும், அது ஏற்றுள்ள கொள்கையின் விபரீதங்களையும் காட்டுகிறது, உலகம் முழுவதும் பரவும் இந்திய வெறுப்பை தடுக்கும் வகையில் பெரும்பான்மை ஹிந்து சமூகம் சங்க பரிவாரங்களை முற்று முதலாக புறக்கணிக்க வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
7.அம்மாப்பட்டினத்தில் மது, புகையிலை மற்றும் கொடிய விளைவுகளை உண்டாகக்கூடிய அனைத்து போதை வஸ்துக்களின் பயன்பாடு அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இதனால் ஒட்டுமொத்த இளைய சமுதாயமே, ஒழுக்கமற்று சமூக விரோதிகளாய் மாறும் அபாயம் உள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து, போதைப்பொருள்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.
8.மின்சார வாரியத்தின் மெத்தனப் போக்கால், தொடர்ந்து உயிரிழப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. பழுதடைந்த மற்றும் தாழ்வான மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைத்து, விலைப்பதிப்பற்ற உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.
9.ECR உள்ளிட்ட பிரதான சாலைகளில், கட்டற்று திரியும் கால்நடைகளால் விபத்துகளும், அதை தொடர்ந்து உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக நடந்த வண்ணம் உள்ளது. கால்நடை உரிமையாளர்கள் முறையான இடவசதி ஏற்பாடு செய்து அதை கட்டி பராமரிக்க வேண்டும் என்றும், அதை மீறுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகமும், காவல்துறையும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.
10.அம்மாப்பட்டினம் ஊராட்சியில் இன்று கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. இதனால் மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை இந்த ஊர் சந்தித்து வருகின்றது. ஊராட்சி நிர்வாகமும், வட்டார வளர்ச்சி அலுவலரும் முறையான மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி இந்த ஊருக்கு செய்து தர வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.
11.ECR பகுதிகளிலும், ஊருக்குள் உள்ள சாலைகளிலும், சிறுவர்கள், நோயாளிகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிக சத்ததுடனும், அதிவேகத்துடனும் , சில இளைஞர்களால் இருசக்கர வாகனம் இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் கடந்த காலங்களில் விபத்துகளும் நடந்து, பாதசாரிகள் பாதிக்கப்பட்டும் உள்ளனர். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் உயிர் மற்றும் மற்றவர்களின் உயிரை கவனத்தில் கொண்டு சிறுவர்கள், இருசக்கர வாகனம் இயக்க தடை போட்டும், இளைஞர்கள் குறைந்த வேகத்தில் இயக்குகிறார்களா என கண்காணிக்கவும் வேண்டும். மேலும் விதிகளை மீறி அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனம் இயக்கும் இளைஞர்களை, காவல்துறை கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.