ஆவுடையார்கோவில் அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2019- 2020 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 3-ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கும் என கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.சுகந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 3-ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கும்.
அனைத்து பாடப்பிரிவுகளிலும்  மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவத்தினர், தேதிய மாணவர் படை ஆகியோருக்கு சிறப்பு  ஓதுக்கீட்டில்  மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

ஜூன் 3ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு  பி.ஏ. தமிழ் மற்றும் பி.ஏ. ஆங்கில  படிப்பிற்கு விண்ணப்பித்த  அனைத்து மாணவ, மாணவிகளில் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் 70-க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு  கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு பி.எஸ்.சி கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்,  பி.காம், பி.பி.ஏ பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்தவர்களில் 350 முதல் 400 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஜூன் 5ஆம் தேதி, புதன்கிழமை காலை 9 மணிமுதல்  பி.எஸ்.சி கணிதம், இயற்பியல். கணினி அறிவியல், பி.காம், பி.பி.ஏ பாடப்பிரிவுகளுக்கு  விண்ணப்பித்தவர்களில் 250 முதல் 349 வரை மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

ஜூன் 6ஆம் தேதி காலை 9 மணி முதல்  பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கில பாடப்பிரிவிற்கு  விண்ணப்பித்தவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

மேற்கண்ட பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளும் தங்கள் பெற்றோர்களுடன் குறித்த நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments