சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசே கட்டுப்படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்




ஆவுடையார்கோவில் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் பழனிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ராதா கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெபமாலை பிச்சை, மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசே கட்டுப்படுத்து, ஈரான் மீது வெறிகொண்டு தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மத்திய அரசு துணை போகாதே என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments