செய்யானத்தில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றம்!



புதுக்கோட்டை மாவட்டம் செய்யானம் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், இன்று அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றினர்.

மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட செய்யானம் கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதியில், ஒரு தரப்பினர் நீண்டகாலமாக ஆக்கிரமிப்பு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு ஆஸ்பெஸ்டாஸ் சீட் மூலம் வீடு அமைத்து வசித்து வந்ததோடு, குறிப்பிட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயமும் செய்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதியின் நீர்நிலை பாதிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது.

அதிகாரிகளின் அதிரடி
நீதிமன்ற உத்தரவின்படி, இன்று (மார்ச் 13) மணமேல்குடி வட்டாட்சியர் மார்ட்டின் லூர்து கிங் தலைமையில், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மின்சாரத் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக அகற்றப்பட்டன.

பாதுகாப்பு
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, மீமிசல் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments