கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம்




புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டிச்செல்வி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சுசிலா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரண்யா, சுபாஷினி, மாநகர தலைவர் விஜி ஆகியோர் பேசினர். போராட்டத்தில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்தும், இதற்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தியும் ஒப்பாரி வைத்து கோஷம் எழுப்பினர். இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments