ஆவுடையார்கோவிலில் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு மையம் மாற்றம்



ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆவுடையார்கோவிலில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு மையம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு முறையே ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தேர்வு மையங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 300 பேர் தேர்வெழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

இம்மையத்தில் கஜா புயலால் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால், தேர்வர்களின் பாதுகாப்பு கருதி அருகேயுள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments