அம்மாபட்டினத்தில் ஆக்கிரமித்த நீர்நிலைகளை விரைவில் மீட்க வேண்டும் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கைஅம்மாப்பட்டினத்தில் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்டு அதனை தூர் வார வேண்டும் எனவும், செங்குளத்தான் குளத்தின் மேட்டை இடித்து அதனை ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கின்றனர்.
மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதிக்கு சாலை வசதி தேவை இல்லை.

இதுபோன்ற குளத்தின் மேட்டை ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்தால் மழைக்காலங்களில் குளம் நிறைந்து உடைந்தால் அதை சுற்றியுள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை மனுவை மணமேல்குடி தாசில்தாரிடம் வழங்கினர்.

இதில் கிளைத் தலைவர் ஷேக்தாவூது, செயலாளர் பைரோஸ்கான், துணைத் தலைவர் சர்ஜூன், பொருளாளர் முஹம்மது யூசுப், மாவட்ட மருத்துவரணி செயலாளர் முஹம்மது சபீர்தீன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments