புதுக்கோட்டை மாணவர் மாநில பேச்சுப்போட்டியில் முதலிடம்!!!மாநில அளவிலான கர்மவீரர் காமராஜர் குறித்த பேச்சுப்போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கு. கோபி முதலிடம் பெற்று ரூ. 25 ஆயிரம் காசோலை மற்றும் வெற்றிக்கோப்பையைப் பெற்றார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி  மற்றும் வடமலையான் மருத்துவக் கல்லூரி, மதுரைநாடார் மகாசன சங்கம் ஆகியன இணைந்து நடத்திய காமராஜர் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி விருதுநகர் சத்ரிய வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இதில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவர் கு. கோபி பங்கேற்று (9-10 ஆம் வகுப்பு பிரிவில்) காமராஜர் இன்றிருந்தால் என்ற தலைப்பிலான பேச்சுப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.

இவருக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலை, சான்றிதழ் மற்றும் வெற்றிக்கோப்பையை வழங்கி வாழ்த்தினார்.

மாணவர் கு. கோபியையும் மற்றும் பயிற்றுவித்த தமிழாசிரியர் கலைச்செல்வி, ஆசிரியர் ஆர். பிரின்ஸ்  ஆகியோரையும் பள்ளி வளாகத்தில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வர் ச.ம. மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Post a Comment

0 Comments