மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு சார்பில், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படம், மாற்றுத் திறனாளியின் கையொப்பம் அல்லது கைரேகை ஆகியவற்றை ஸ்கேன் செய்து விவரங்களை இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
அதேசமயம், மாற்றுத் திறனாளியின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் கீழ்கண்ட ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேதி வாரியாக நடத்தப்படுகிறது.
முகாம் நடைபெறும் இடங்கள்:
ஜூலை16 - அன்னவாசல்,
ஜூலை17 - குன்றாண்டார்கோவில்,
ஜூலை18 - திருமயம்,
ஜூலை 19 - விராலிமலை,
ஜூலை 23 - பொன்னமராவதி,
ஜூலை 24 - அரிமளம்,
ஜூலை 25 - மணமேல்குடி,
ஜூலை 26 - ஆவுடையார்கோவில்,
ஜூலை 30 - அறந்தாங்கி,
ஜூலை 31 - திருவரங்குளம்
மற்றும் ஆகஸ்ட் 1 - மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
நன்றி: தினமணி

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.