புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் வருகிற ஆக-15 கிராமசபைக் கூட்டம்



சுதந்திர தினத்தன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம
ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.

சுதந்திர தினமான 15.08.2019 ஆம் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள பொருள்:

  • கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், 
  • குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், 
  • கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், 
  • ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம், 
  • கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (VPDP) பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செயதல், 
  • உணவுபொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, 
  • முழுசுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம், 
  • ஜல்சக்தி இயக்கம் 

உள்ளிட்ட பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments