கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் நடைபெற்று வரும் மார்க்கக் கல்வி வகுப்புகள்! மாணவிகள், தாய்மார்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!!



புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் மாணவிகள் மற்றும் தாய்மார்களுக்கான மார்க்கக் கல்வி மற்றும் குர்ஆன் வகுப்புகள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.

பெண்களின் மார்க்க கல்வியின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த மதரஸாவில் நான்கு முக்கிய பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

இது குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு:
 
வகுப்புகளின் கால அட்டவணை:
ஜும்ரா வகுப்பு: காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறுகிறது. இவ்வகுப்பில் தற்போது 40 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
 
காரிஆ வகுப்பு: இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது. முதலாவதாக காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், மீண்டும் காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெறும்.இதில் தற்போது 23 பெண்கள் பயின்று வருகின்றனர்.
 
ஹாபீழா வகுப்பு: திருக்குர்ஆனை மனனம் செய்யும் இந்த வகுப்பானது காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெறுகிறது.இதில் தற்போது 10 பெண்கள் பயின்று வருகின்றனர்.

குர்ஆன் நளிரா வகுப்பு: குர்ஆன் ஓதும் பயிற்சியை உள்ளடக்கிய இவ்வகுப்பு காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறுகிறது. இதில் தற்போது 6 தாய்மார்கள் பயின்று வருகின்றனர்.

மதரஸாவின் இச்சீரிய முயற்சியால் இப்பகுதி மாணவிகள், தாய்மார்கள் உரிய மார்க்க அறிவைப் பெற்றுத் திகழ்கின்றனர். சிறந்த முறையில் கல்வியளிக்கும் மதரஸா நிர்வாகத்தை மக்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

இது சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு ரஹ்மானியா பெண்கள் மதரசாவை தொடர்பு கொள்ளவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments