குவைத் வாழ் கோபாலப்பட்டினம் மக்களின் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்!!!



கோபாலப்பட்டினம் வாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர்.

இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடினர்.

அதன் அடிப்படையில் ஹஜ் பெருநாள் 11/08/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று குவைத் தலைநகர் குவைத் சிட்டி மற்றும் மற்ற நகரங்களில் உள்ள கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மக்கள் ஏரளமானோர் கலந்து கொண்டு தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாளை கொண்டாடினார்கள்.

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தை நினைவு கூறுக்கின்ற ஒரு திருநாளாகும்.






Post a Comment

0 Comments