சவூதி தேசிய தினம் மற்றும் தமுமுக வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு ரியாத்தில் நடைபெற்ற தமுமுகவின் கடல் கடந்த இரத்ததான முகாம்..!



சவூதி 89 வது தேசிய தினம் மற்றும் தமுமுக வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் தமுமுக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

ரியாத் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் இரத்த வங்கியில் 27/9/19 வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த ரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமில் தமுமுகவின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இரத்ததானம் வழங்க வருகை புரிந்தனர். ஆனால் நேரமின்மை காரணத்தால் 92 சகோதரர்கள் மட்டும் இரத்ததானம் வழங்கினர்.

தமுமுக ரியாத் மண்டலத்தின் இலக்குகளில் ஒன்றான இரத்ததான முகாம் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனின் கிருபையால்  எதிர்பார்த்ததை விட  அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த ரத்ததான முகாமில் இன,மத மற்றும் மொழி பேதமின்றி பல்வேறு மதத்தினரும் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்களும் குறிப்பாக சூடான் போன்ற பிறநாட்டு சகோதரர்களும் காலை எட்டு மணிக்கெல்லாம் வருகை புரிந்து தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சகோதரர்கள் நமது ரியாத் மத்திய மண்டல நிர்வாகிகளை தொடர்பு கொண்டு காலதாமதம் ஆகிவிட்டது ஆகையால் நாங்கள் இப்பொழுது வருகை புரிந்து இரத்தத்தை தர முடியுமா என்று தொலைபேசியில் வினவினர். ஆனால் நேரமின்மை காரணமாக அவர்கள் இரத்ததானம் தர இயலாத சூழ்நிலையை நிர்வாகிகள் விளக்கி கூறி மேலும் அவர்கள்அனைவரிடமும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி மாதம் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நமது நியூ செனையா பகுதியில் நடைபெற உள்ள இரத்ததான முகாமில்  கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இரத்த வங்கி உடனான தொடர்பை நமது ரியாத் மத்திய மண்டல சமூக நலத்துறை துணைச்செயலாளர் அறந்தாங்கி சித்திக் ரஹ்மான் அவர்கள் சரியான முறையில் அவர்களை தொடர்பு கொண்டு அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் மற்றும் இறுதிவரை இரத்த வங்கி உடனான தொடர்பை மிகச் சிறப்பாக வழிநடத்திச் சென்றார். இந்த இரத்ததான  முகாமிற்கான வாகன வசதி ஏற்பாட்டை நமது மத்திய மண்டல தொண்டரணி செயலாளர் தாஜுதீன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் நமது ரியாத் மண்டல மக்கள் தொடர்பாளர் ஷாக்கிர் பேக் அவர்கள் , ரியாத் மண்டல மருத்துவரணி செயலாளர் மங்களக்குடி தாஹா ரசூல் அவர்கள் மற்றும் இதர மண்டல , கிளை நிர்வாகிகளும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை அளித்ததன் காரணமாக இந்நிகழ்வு ரியாத் மண்டலத்தின்  வரலாற்றில் முத்திரை பதித்தது. என்று கூறினால் மிகையாகாது.

அனைத்து சமுதாய அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ரியாத் மண்டல தலைவர் பொறியாளர் சாகுல் ஹமீது அவர்கள் இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியதுடன் இது போன்ற சமுதாய பணிகளை மென்மேலும் செய்யுமாறு ரியாத் மண்டல தமுமுகவிற்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த இரத்ததான முகாமிற்கான துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க உதவியவர்களுக்கும் உணவு ஏற்பாடு மற்றும் அதற்கான பொருளாதார பங்களிப்பு வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் தமுமுக ரியாத் மத்திய மண்டலம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இரத்ததானம் வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் மற்றும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தமைக்காக இரத்த வங்கியில் பணிபுரிந்த ஊழியர்களுக்கும் ரியாத் மத்திய மண்டலம்  சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் இந்த இரத்ததான முகாமிற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, முகாமை நிறைவு செய்து கலைந்து சென்றோம்.

இந்த இரத்ததான முகாம் சுவைதி கிளை முன்னெடுத்து பத்தாஹ் கிளையுடன் இணைந்து நடத்த திட்டமிட்டது என்பது குறிப்பிடதக்கது.

தகவல்
தமிழ் தஃவா தமுமுக  - மமக
ஊடகப்பிரிவு
ரியாத் மத்திய மண்டலம்
சவூதி அரேபியா.







கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments