நாகூர் அரசு மருத்துவமனையில், கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்



நாகூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகையை அடுத்த நாகூர் புதிய பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அப்பு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தொகுதி செயலாளர் ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சாகுல் அமீது, குமாயூன் கபீர், மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

நாகூர் கடற்கரை பூங்காவை சீரமைத்து, சுத்தம் செய்ய வேண்டும்.
சுற்றுலா தளமான நாகூருக்கு என்று எந்த மானியத்தையும் ஒதுக்காத மாநில அரசை கண்டிப்பதும், இனிவரும் காலங்களில் அதற்கான மானியத்தை ஒதுக்கி நாகூர் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என அரசை கேட்டுக்கொள்வது.

நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் மாசு நிறைந்த காற்றாக மாறி நாகூரில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவ காரணமாக இருக்கும் தனியார் துறைமுகத்தை இழுத்து மூட வேண்டும்.
நாகூர் அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தி கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியின் பொறுப்பாளர்கள் மணிகண்டன், ரியாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments