எச்சரிக்கை.!!! ‘சார்ஜ்’ போட்டபடியே செல்போனை பயன்படுத்தியவர் உயிரிழப்பு



நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சார்ஜ் போட்ட‌படியே செல்போனை பயன்படுத்தியவர் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியைச் சேர்ந்த தேவேந்திரன், ஈரோட்டில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் டவர் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது ஆண்ட்ராய்டு செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும்போதே செல்போனை கையில் எடுத்து இயக்கியுள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் ‌குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சார்ஜ் போட்டப்படி செல்போனை பயன்படுத்துவது, அதிக நேரம் பயன்படுத்தியதால் சூடாக இருக்கும்போது செல்போனை சார்ஜ் போடுவது போன்றவற்ற தவிர்க்க வேண்டும் என்று  தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments