மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறையின் சார்பில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்துப் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் யாரேனும் பணி அமர்த்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான  தீர்மானங்களை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் அனைத்து குழந்தைகள் இல்லங்களிலும் மருத்துவ முகாம்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.

குழந்தைத் திருமணம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைத் திருமணம் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை தயாரித்து பொது மக்களிடம் வழங்க வேண்டும் என்றார் உமா மகேஸ்வரி.

கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments