இந்தியர்களுக்கு குட் நியூஸ்... ஹோர்முஸ் நீரிணையை கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி.. எரிவாயு தட்டுப்பாடு நீங்கும்!




வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கையை ஏற்று இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி தந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடி வைத்திருந்ததால் எண்ணெய் கப்பல்கள் இந்தியாவிற்கு வர முடியாத சூழல் நிலவியது. இதனால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில், ஈரான் அனுமதி தந்ததையடுத்து இந்திய எண்ணெய் கப்பல்களான புஷ்பக் மற்றும் பரிமல் ஆகியவை ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வருகின்றன.

ஈரான் தற்போது அனுமதி வழங்கியதால் இந்தியாவில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கையை ஏற்று இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது. ஈரான் அனுமதியால் இந்தியாவில் எரிபொருள் இறக்குமதி சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments