புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்..புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,334 மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கவுள்ளதால் தகுதியுள்ள மகளிர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரிஅவர்கள்  அழைப்புவிடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது;

2019 - 20ஆம் ஆண்டுக்கான அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் மகளிர் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்ல இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வாங்கிட நகரப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. வயது 18 முதல் 40 வயது வரை. ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும்.

 இத்திட்டத்தில் 50 சதவிகித மானியமாக அதிகபட்சம் ரூ.25 ஆயிரம்  அரசும், மீதமுள்ள தொகையை பயனாளிகளும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

மகளிர் மாற்றுத் திறனாளிகளுக்கு மானியம்  ரூ.31,250 வழங்கப்படும். அந்தந்தப் பகுதி நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலங்களில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.

தகுதி:
 • நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கல்வி தகுதி 8ஆம் வகுப்பு.
 • 18 முதல் 40 வயது வரை.
 • ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம்.
 • ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படும். 

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்:
 • வயதுச் சான்றிதழ், 
 • புகைப்படம், 
 • இருப்பிடச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது), 
 • இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், 
 • வருமானச் சான்று (தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் துறைத் தலைவர், சுய சான்று),
 • வேலை பார்ப்பதற்கான பணிச் சான்று, 
 • தொடர்புடைய நிறுவனத் துறைத் தலைவரால் வழங்கப்பட்ட ஊதியச் சான்று, ஆதார் அட்டை, 
 • 8 ஆம் வகுப்புக்கான கல்விச் சான்று, 
 • மாற்றுச் சான்றிதழ், 
 • முன்னுரிமை பெறத் தகுதியுள்ளவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும், 
 • சாதி சான்று, 
 • மாற்றுத் திறனாளியெனில் தேசிய அடையாள அட்டை.

Post a Comment

0 Comments