பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலஅவகாசம் நீட்டிப்பு!



மொபைல் எண் வாங்க ஆதார் எண் தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு கூறிய நிலையில், தனி நபருக்கான நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டைக்கு ஆதார் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.
எனவே, பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

இந்த இணைப்புக்கு கடைசி காலக்கெடுவாக மார்ச் 31ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன் பின்பு, பல்வேறு காரணங்களால் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 6 முறை நீட்டிக்கப்பட்டது.

இறுதியாக  2019 செப்டம்பர் 30ந்தேதிக்குள் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.  வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு, ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக உள்ளது.

இதனிடையே, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இந்த வருடம் செப்டம்பர் 30ந்தேதியில் இருந்து டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

எப்படி இணைப்பது?

1. incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்.
2. Quick Links என்பதன்கீழ் Link Aadhaar கிளிக் செய்யவும்.
3. திரையில், பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட்டு இணைத்துக்கொள்ளலாம்.
4. ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல் காண்பிக்கும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments