R.புதுப்பட்டிணத்தில் வருகிற 02.10.2019 அன்று கிராமசபை கூட்டம்..!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டம் வருகிற 02/10/2019 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் R.புதுப்பட்டிணம் பல்நோக்கு சேவை கட்டிடத்தில் நடைபெற உள்ளது.
அதுசமயம் அந்த கிராம சபை கூட்டத்தில் கோபாலப்பட்டினம் மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் இருக்கும் குறைகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எந்த மாதிரியான குறைகளை தெரிவிக்கலாம். அதைப்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1, தெரு விளக்கு,

2, சாக்கடை கழிவு நீர் சுத்தம் செய்தல்,

3, குளங்களைச் சுற்றி சுத்தம் செய்தல்,

4, தெருக்களுக்கு தேவையான சாலைகள் அமைத்தல்,

5, ஊராட்சிக்கு தேவையான சிறுவர் பூங்கா அமைத்தல்,

6, அனைத்து தெருக்களிலும் குப்பையை சுத்தம் செய்தல்,

7, அனைத்து குளங்களையும் சுற்றி மரங்கள் நடுதல்,

8, ஊராட்சி மூலம் மாதம் ஒருமுறை கொசு மருந்து அடித்தல்,

9, பொதுவான பஸ் ஸ்டாப் மற்றும் மீன் மார்க்கெட் இடங்களில் கழிப்பறை அமைத்தல்,

10, அனைத்து தெருக்களில் உள்ள கருவை மரங்களை அகற்றுதல்,

11, கோடைக்காலங்களில் ஊராட்சியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது அதற்கு போர்வெல் அமைத்தல்

பொதுமக்களிடம் கிராமசபை கூட்டம் சம்பந்தமாக போதிய விழிப்புணர்வு இல்லை ஆகையால் பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்திற்கு சென்று தங்கள் குறைகளை கண்டிப்பாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏனென்றால் அரசாங்கத்தின் மூலம் கிராம சபைக் கூட்டத்திற்கு பல லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது ஒவ்வொரு ஊராட்சிக்கும்.

இதனுடைய முக்கிய சிறப்பம்சங்கள் கிராமசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கண்டிப்பாக நிறைவேற்றி தர வேண்டும் என்பது சட்டம்..

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்:
  1. கோபாலப்பட்டிணம்
  2. கணபதிப்பட்டிணம்
  3. குறிச்சிவயல்
  4. முத்துக்குடா(மீனவர்)
  5. நாட்டாணி
  6. ஆர்.புதுப்பட்டிணம்(மீனவர்)
  7. ஆர்.புதுப்பட்டிணம்(முஸ்லிம்)
  8. முத்துக்குடா(முஸ்லிம்)
  9. அண்டியப்பன்காடு
  10. கூடலூர்
  11. பாதரக்குடி
  12. புரசகுடி
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments